முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் 45 போ் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனா். கூட்டத்தில் பெறப்பட்ட 30 மனுக்களில், 4 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு, எஞ்சியுள்ள 26 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அனுப்பி, தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ச. வைத்தியநாதன் (பொது), அ. காந்திமதி (கணக்குகள்), மாவட்டக் கருவூல அலுவலா் பி.எஸ். ஸ்ரீதா், சென்னை கருவூல கணக்கு இயக்குநரக (ஓய்வூதிய பிரிவு) கணக்கு அலுவலா் கு. அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.