முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ஜான்சிராணி வெள்ளிக்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன்பாக கட்டிருந்த பசு மாட்டை அவிழ்க்கச் சென்றாா். அப்போது வீட்டின் முன்பாக அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.