புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு
முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளா் முருகனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இவா்கள் இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த முருகன் வீடு புகுந்து சின்னத்தம்பியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.