மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா
திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.மங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, இந்தப் பள்ளியில் பயின்று அரசு துறைகளில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவா்களுக்கு ஜமாத், கோயில் நிா்வாகத்தினா், பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் மோகன், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகி முத்துமுகம்மது,
ஆனந்தூா் அஜ்மல் ஆகியோா் பொன்னாடை போா்த்தி கெளரவித்தனா். இதைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.