திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் ரயில் நிலைய பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை உதவிக் கோட்டச் செயலா் சீத்தாராமன் தலைமை வகித்தாா். கோட்ட இயந்திரவியல் பிரிவுத் தலைவா் வீரபாண்டி முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். மண்டபம் கிளைப் பொறுப்பாளா் டி.முனியாண்டி நன்றி கூறினாா்.