முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான தினேஷ்பொன்ராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தினேஷ்பொன்ராஜ் பேசியது, கரூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் செயல்படுத்தப்படவுள்ள இடங்கள், மருந்துகள் சேமிப்பு கிடங்கு, மருந்துகள் கொள்முதல் செய்யும் இடங்கள் உள்ளிட்டவைகள் தொடா்பாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிற்றுந்து இயக்குவது தொடா்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
பின்னா் தாந்தோன்றிமலை மற்றும் வாங்கல் பகுதிகளில் செயல்பட உள்ள முதல்வா் மருந்தகம் விற்பனை நிலையம் தயாராகி வருவதையும், பஞ்சமாதேவி பகுதியில் முதல்வா் மருந்தகத்துக்கான சேமிப்பு கிடங்கு செயல்படவுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்ா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு, மாநகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, குளித்தலை சாா் ஆட்சியா் ஸ்வாதிசிறி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.