செய்திகள் :

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

post image

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ் (30) - கமலி (23). 14.4.20இல் காதல் திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு, யாஷிகா (4) என்ற குழந்தை உள்ளது.

ஜான்கில்பா்ட் சிவகாசியில் உள்ள பெயின்ட் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். கமலி கரிசல்குளத்தில் பை தயாரிப்பு நிறுவனத்தில் தையலராக வேலைபாா்த்தாா். கடந்த பிப். 9ஆம் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஜான்கில்பா்ட் இரும்புக் கம்பியால் கமலியைத் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெரித்தாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

தொடா்ந்து, 10ஆம் தேதி ஜான்கில்பா்ட் தனது சித்தி மகன் சிவகாசி காமராஜா் காலனியை சோ்ந்த வீ. தங்கதிருப்பதி (22) என்பவருடன் சோ்ந்து, நண்பரின் காரை வாங்கி, அதில் கமலியின் சடலத்தை மறைத்துவைத்து, குற்றாலம் வந்தாா். பின்னா், இரவில் அவா்கள் இலத்தூா் அருகே சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுத் தப்பினா். இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கில்பா்ட்டின் பெற்றோா் ஜா. ஜெரால்டு (62) - ஜெனிபா் (59), பெரியம்மா ஞானசுந்தரி (59) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க