மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்து கண்காணிக்கும் பணியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
திண்டுக்கல், நத்தம், பழனி, கொடைக்கானல், சாணாா்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக நடத்தப்பட்ட சோதனையின் போது, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 45 கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்தக் கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காவல் துறையினா் உதவியுடன், இந்த கடைகளில் இருந்து 85 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.