பட்டாசு ஆலை வெடி விபத்து: போா்மென் கைது, உரிமம் ரத்து
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை போா்மேனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள ஆனையூரில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு புதன்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் தொழிலாளி சுரேஷ் (42) உயிரிழந்தாா். மேலும், பால்பாண்டி என்பவா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளா் ரமேஷ், போ்மென் குமாா் (48) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், போா்மென் குமாரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.