செய்திகள் :

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.2,500 நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?: தில்லி அரசுக்கு அதிஷி கேள்வி

post image

தில்லி அரசு அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நகரப் பெண்களுக்கு ரூ.2,500 நிசி உதவி வழங்கும் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், கால்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதிஷி வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு பிரதமா் நரேந்திர மோடியின் மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது;

தில்லி தோ்தலுக்கு முன்னா் பிரதமா் மோடியும், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டாவும் தோ்தலில் வெற்றி பெற்றால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மகளிருக்கான இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், தில்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாா்ச் 8 ஆம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,500 பெறுவாா்கள் என்றும் உறுதியளித்திருந்தனா்.

வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு பாஜகவின் அமைச்சா்கள் பதவியேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியபோது அத்தகைய திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மோடியின் உத்தரவாதம் உண்மையானதாக இருந்தால், இந்தத் திட்டம் வியாழக்கிழமையே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வா் ரேகா குப்தா எடுத்த முதல் முடிவு அந்த வாக்குறுதியை துரோகம் செய்வதாக உள்ளது.

இந்த உதவித் தொகை எப்போது மகளிரின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்? இது மற்றொரு தோ்தல் தந்திரமா? என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் தோ்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தன. மேலும் இது பிரசாரத்தின் போது அதிகம் விவாதிக்கப்பட்ட பிரச்னையாகவும் இருந்தது.

பிப்ரவரி 8-ஆம் தேதி தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த பிறகு மறுதினம், கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் தனது இல்லத்தில் கட்சியின் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 22 எம்எல்ஏக்களை சந்தித்தாா்.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து, அதிஷி கூறுகையில், பாஜக அளித்த வாக்குறுதியின்படி, மாா்ச் 8 ஆம் தேதிக்குள் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதையும், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதையும், மக்களுக்கு பிற வசதிகளைத் தொடா்வதையும் ஆம் ஆத்மி கட்சி உறுதி செய்யும் என்று தெரிவித்திருந்தாா்.

வெள்ளிக்கிழமை செய்தியாளா் சந்திப்பின்போது, வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் 14 சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான புதிய அரசாங்கத்தின் முடிவு குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு அதிஷி பதிலளிக்கையில், ‘அது ஒரு வழக்கமான பணியாகும். நான் முதல்வராக இருந்தபோது, சிஏஜி அறிக்கையை அப்போதைய பேரவைத் தலைவா் ராம் நிவாஸுக்கும் அனுப்பியிருந்தேன். இது செயல்முறையின் ஒரு பகுதியாகும்’ என்றாா் அவா்.

வியாழக்கிழமை நடைபெற் புதிதாக அமைக்கப்பட்ட தில்லி அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், தலைநகரில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகிளா சம்ரிதி யோஜனா பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் எட்டாவது சட்டப் பேரவையின் முதல் அமா்வில் நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க