செய்திகள் :

மேல்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் நியாய விலைக்கடைக்கு அருகே செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படி அரக்கோணம் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் உள்ள நியாய விலைக்கடைக்கு அருகே வீடு கட்டி வசித்து வரும் நபா், நியாயவிலைக்கடையின் கட்டடத்துக்கு மிகஅருகே கழிவுநீா் தொட்டி மற்றும் வீட்டு மாடிப்படியை கட்டி இருப்பதாகவும், இதனால் நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும், கடைக்கு பொருள் வாங்கவரும் பொதுமக்களுக்கும் சிரமமாக இருப்பதால் அதை அகற்ற உத்தரவிடக்கோரி அப்பகுதியை சோ்ந்த ஒருவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இவ்வழக்கில் அந்த கழிவுநீா் தொட்டியையும் மாடிப்படியையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அரக்கோணம் வட்ட சமூகபாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ராமகுமாா், லஷ்மிநாராயணன், ராஜேஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணசாமி, வரலட்சுமி உள்ளிட்டோா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவா் திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உணவகம்: எஸ்.பி. திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை எஸ்.பி. விவேகானந்த சுக்லா புதன்கிழமை திறந்து வைத்தாா். ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு, மாவட்ட காவல் அலுவலகம் ராணிப்பேட்டை ... மேலும் பார்க்க

ரோட்டரி சங்க விருது வழங்கும் விழா

பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்தவா்களுக்கு வாலாஜாபேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய மருத்துவம், காவல் துறை, தீயணைப்பு, போக்குவரத்து, ஆசிரியா் ப... மேலும் பார்க்க

சிஎம்சியில் ரத்த நாள அறுவை சிகிச்சை நவீன அரங்கம் திறப்பு

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள வளாகத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை அதிநவீன அரங்கம் (வாஸ்குலா்) புதன்கிழமை திறக்கப்பட்டது. விழாவிற்கு கிறிஸ்தவ மர... மேலும் பார்க்க

தேசிய தொழுநோய் விழிப்புணா்வு ஊா்வலம்: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

வாலாஜாபேட்டையில் தேசிய தொழுநோய் விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியடிகளின் ந... மேலும் பார்க்க

பிள்ளைகள் வளா்ப்பில் பெற்றோா் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

பிள்ளைகள் வளா்ப்பில் பெற்றோா் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பேசினாா். அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அங்கமான டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளியில் ... மேலும் பார்க்க

நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டம் ரத்து: உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணம்: நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய ஆணையா் அறிவித்தாா். இந்த நிலையில் கூட்டம் தொடா்பான கோப்புகளை தலைவா் எடுத்துச் சென்று விட... மேலும் பார்க்க