ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
மும்பை: ஆபாச வீடியோவை காட்டி தொழிலதிபருக்கு மிரட்டல்; நண்பரின் அத்துமீறல்..
மும்பையில் சொந்த நண்பனிடம் ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை அந்தேரி பவாய் பகுதியில் வசிக்கும் ஜான் பெரேரா என்பவர் மீது அவரது நண்பர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது மற்றும் எனது மனைவியின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி ஜான் மிரட்டி வந்தார். அதோடு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சோசியல் மீடியாவில் பகிராமல் இருக்கவேண்டுமானால் எனது மனைவியை உறவுக்கு அனுப்பவேண்டும் என்று வாட்ஸ்-அப் அழைப்புகள் மூலம் தொடர்ந்து மிரட்டினார். அதோடு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிராமல் இருக்க ரூ.80 லட்சம் பணம் கொடுக்கும் படியும் கேட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜனவரி வரை இது போன்று தொடர்ச்சியாக மிரட்டி வந்தார்." என்றும், அதனால் வேறு வழியில்லாமல் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு அழைக்கப்படுவார். விசாரணையின் அடிப்படையில் அவரை கைது செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.