கோவை: இருசக்கர வாகன விபத்து; மன்னிப்புக் கேட்ட மாணவிக்கு முத்தமிட்ட இளைஞர் கைது; என்ன நடந்தது?
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையைப் போலவே கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவையில் 20 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 28) இரவு குனியமுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் மாணவி நிலை தடுமாறி கீழே விழப்போனார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதையடுத்து மாணவி அந்த இளைஞரைப் பார்த்துச் சிரித்துவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
மாணவி சிரித்ததால் இளைஞர் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஒருகட்டத்தில் அவர் மாணவியைத் தடுத்து நிறுத்திப் பேசியுள்ளார். திடீரென்று அவர் மாணவி கையைப் பிடித்து, கை மற்றும் கழுத்து பகுதிகளில் முத்தம் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த மக்கள் வருவதற்குள் அந்த இளைஞர் ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி, குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிந்து குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது செரீஃப் என்பவரைக் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், மாணவி சிரித்துப் பேசியதால் தவறாக எடுத்துக் கொண்டு முத்தமிட்டதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb