வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் அத்துமீறல் - பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக இருந்தார். இவரின் வீட்டில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்க்கும் சில பெண்கள் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த பெண் ஒருவரிடம், அ.தி.மு.க பிரமுகர் பொன்னம்பலம் அநாகரீகமாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் வாடகைக்கு குடியிருந்த மற்ற பெண்களுக்கு தெரிந்ததும் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு கீழ்படப்பை பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் குடிபெயர்ந்தனர்.
அதன்பிறகும் இளம் பெண்ணை ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட பொன்னம்பலம் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பொன்னம்பலம் குறித்த தகவலைத் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த பெண்களும் அவரின் நண்பர்களும் பொன்னம்பலத்திடம் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது பொன்னம்பலத்தை பெண்கள், சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதை வீடியோவாகவும் சிலர் செல்போன்களில் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானது.
மேலும் சம்பந்தப்பட்ட பெண், மணிமங்கலம் காவல் நிலையத்தில் பொன்னம்பலம் குறித்து புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார்அ.தி.மு.க பிரமுகர் பொன்னம்பலத்தைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப்பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மணிமங்கலம் போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தகவல் வெளியானதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொன்னம்பலத்தை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs