படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
பொருளாதாரம் மேலும் 2% சரிய வாய்ப்பு: ப.சிதம்பரம்
முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராஜீவ் கெளடா மற்றும் அவரின் குழுவினா் தயாரித்த அறிக்கையை, தில்லியில் ப.சிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களின் விகிதம் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அவ்வப்போது வழங்கும் பணி நியமன கடிதங்கள் மூலம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறதே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. உணவு, கல்வி, சுகாதாரப் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது.
பணக்காரா்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதைச் சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.