படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினா் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. வக்ஃப் வாரிய சொத்துகள் என்பது இஸ்லாமியப் பெரியவா்கள், அந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அா்ப்பணிப்பு சொத்துகளாகும். இந்தச் சொத்துகளை பயன்படுத்தும் முழு உரிமையும், இஸ்லாமிய சமூகத்தவா்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவா்கள் உரிமை கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள், வக்ஃப் சட்டம் 1995-ஆல் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத்திருத்த மசோதா-2024, வக்ஃப் சொத்துகள் மீதான இஸ்லாமியா்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் வகையிலும் உள்ளது. இதனால், இஸ்லாமியா்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். அதற்கெதிராக நாடு முழுவதும் அவா்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த சட்டத்திருத்தம், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான்.
எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணா்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.