செய்திகள் :

5 மாதங்களாக பூட்டிய வீட்டில் கிடந்த தந்தை, மகள் சடலங்கள்; விசாரணையில் சிக்கிய டாக்டர்- என்ன நடந்தது?

post image

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 4-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அழுகிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலமும் அதன் அருகிலேயே இளம்பெண் ஒருவரின் சடலமும் கிடந்தது. இதையடுத்து சடலங்களை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலமாக கிடந்தவர்கள் குறித்து விசாரித்தபோது வேலூரைச் சேர்ந்த சங்கர் (78), அவரின் மகள் சிந்தியா (37) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் எப்படி இறந்தார்கள் என விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அடுக்குமாடி குடியிருப்பு

இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸார் கூறுகையில், ``சடலமாக மீட்கப்பட்ட சங்கர், வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்னை இருந்ததால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையும் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சங்கரின் மகள் சிந்தியா, கணவரைப் பிரிந்து அப்பாவுடன் வசித்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் சிந்தியா தன்னுடைய தந்தையின் உடல் நலம் குறித்து கூறியதோடு அதற்கான சிகிச்சை பெற ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட சாமுவேல்

அப்போது டாக்டர் சாமுவேல், நீங்கள் வேலூரிலிருந்து சிகிச்சை பெற முடியாது. எனவே சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்தால் சிகிச்சை அளிக்க உதவுவதாகக் கூறியிருக்கிறார். டாக்டர் சாமுவேல் கூறியதையடுத்து சங்கரும் அவரின் மகளும் திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் சங்கரும் சிந்தியாவும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் மரணமடைந்து சில மாதங்களாகியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக டாக்டர் சாமுவேலிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். அதனால் அவர் மீது எங்களின் சந்தேக பார்வை விழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த சங்கர், சிந்தியா ஆகியோரின் சடலங்கள் அழுகி தூர்நாற்றம் வீசாமலிருக்க வாசனை திரவியங்கள் வீடு முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடும் வெளிபக்கமாக பூட்டப்பட்டுள்ளது. சங்கரையும் சிந்தியாவையும் யாரும் தேடாததால் அவர்கள் இறந்த தகவல் உடனடியாக வெளியில் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும். தற்போது மருத்துவர் சாமுவேலைக் கைதுசெய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

கோவை: மது போதையில் இளைஞர் கொலை; கை, கால்களைக் கட்டி தண்ணீரில் வீசிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற... மேலும் பார்க்க

`டிகிரி சர்டிஃபிகேட் ரூ.10,000…’ - கட்டுக்கட்டாக போலிச் சான்றிதழ்கள்... அண்ணாமலை பல்கலை., சர்ச்சை!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்வாகச் சீர்கேடுகளாலும், முறைகேடுகளாலும் முடங்கும் நிலைக்குச் சென்றது. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கொண்டு, அந்த... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற ரூ.1.60 கோடி ஹவாலா பணம்! – விழுப்புரத்தில் மடக்கிய போலீஸார்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையக் காவலர்கள், இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பேக் ஒன்றுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கோவை: இருசக்கர வாகன விபத்து; மன்னிப்புக் கேட்ட மாணவிக்கு முத்தமிட்ட இளைஞர் கைது; என்ன நடந்தது?

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவைய... மேலும் பார்க்க

வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் அத்துமீறல் - பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக இருந்தார். இவரின் வீட்டில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனி... மேலும் பார்க்க

`யாரும் அக்கறை காட்டவில்லை'- சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி - மயிலாடுதுறை சோகம்

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (69). இவரது மனைவி செந்தாமரை (59). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஹோமியோபதி மருத்துவராக இருந்த இளங்கோவன் திராவிடர் கழகத்தில் ... மேலும் பார்க்க