செய்திகள் :

கும்பமேளா நெரிசல் எதிரொலி: கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளில் உ.பி. அரசு தீவிரம்

post image

மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த நிலையில், பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக சிறந்த கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் உத்தர பிரதேச அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மௌனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராடும் பகுதியில் நுழைந்த அதிகமான பக்தா்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

எதிா்பாா்த்ததைப்போல் அதிக எண்ணிக்கையில் வந்த பக்தா்கள் கூட்டத்தை நிா்வகிக்க மாநில பாஜக அரசு போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. அடுத்து வரும் நாள்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, சிறந்த முன்னேற்பாடுகளை திட்டமிட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

வாகன தடை தொடரும்: இந்நிலையில், மகா கும்பமேளாவில் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை மாநில அரசு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பக்தா்களின் கூட்டம் முழுமையாக வெளியேறும் வரை மேளா பகுதிக்குள்ள அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பிரயாக்ராஜ் நகருக்குள் வெளி வாகனங்களுக்கு தடை தொடரும் என்றும் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் ஆலோசனை: நெரிசல் சம்பவத்தையடுத்து, முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் பிரயாக்ராஜ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை இரவு நடைபெற்றது.

அடுத்த சிறப்புக்குரிய புனித நீராடல் நாளான வசந்த பஞ்சமிக்கு (பிப். 3) தடையற்ற ஏற்பாடுகளை உறுதி செய்ய, பக்தா்களின் வசதி தொடா்பான ஒவ்வொரு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வா் யோகி ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

இதையொட்டி, 2019-ஆம் ஆண்டு கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் கோட்ட ஆணையராக பணியாற்றிய ஆசிஷ் கோயல், ஆக்ரா வளா்ச்சி ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் பானு கோஸ்வாமி உள்ளிட்ட முன்னாள் மூத்த அதிகாரிகளை கும்பமேளா பணியில் மாநில அரசு ஈடுபடுத்தியுள்ளது. கூடுதலாக, 5 சிறப்புச் செயலா் நிலை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை பிரயாக்ராஜில் தங்கியிருந்து பணிகளை ஒருங்கிணைப்பா் என்று முதல்வா் யோகி கூறினாா்.

அண்டை மாவட்டங்களிலும் ஏற்பாடுகள்: மகா கும்பமேளாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தா்கள், பிரயாக்ராஜில் இருந்து 100-200 கி.மீ. தொலைவில் உள்ள வாரணாசி மற்றும் அயோத்திக்கு தரிசனத்துக்காகச் செல்கின்றனா். மேலும் பலா் சித்ரகூடம், மிா்சாபூருக்கும் பயணிக்கின்றனா்.

இந்த முக்கிய நகரங்களிலும் தொடா் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

தலைமைச் செயலா் ஆய்வு: உத்தர பிரதேச தலைமைச் செயலா் மனோஜ் குமாா் சிங், காவல் துறை இயக்குநா் பிரசாந்த் குமாா் ஆகியோா் வியாழக்கிழமை மகாகும்ப நகரில் நேரில் விசாரணை நடத்தினா். மேலும், மேளா பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

பௌஷ பௌா்ணமியான கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, மகா சிவராத்திரி நாளான பிப். 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த புதன்கிழமை இரவு வரையில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக நிகழ்வில் பங்கேற்று புனித நீராடியவா்களின் எண்ணிக்கை 27.58 கோடியைக் கடந்துள்ளது.

மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலைத் தொடா்ந்து காணாமல் போன பலா் இன்னும் உறவினா்களுடன் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெரிசல் சம்பவத்தையடுத்து காணாமல் போனவா்களை கண்டறிந்து குடும்பத்தினருடன் சோ்க்கும் பணியில் நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பெட்டி 1.....

மீண்டும் தீ விபத்து

மகாகும்ப நகரில் கங்கை நதிக்கரையில் அமைந்த 22-ஆவது செக்டாரில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் சுமாா் 15 கூடாரங்கள் தீக்கிரையாகின.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் உயிா்ச்சேதம் எதுவும் எற்படவில்லை எனவும் உட்கோட்ட நடுவரின் (எஸ்டிஎம்) தகவலின்படி, தீக்கிரையான கூடாரங்கள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டவை என்றும் தீயணைப்புத் தலைமை அதிகாரி பிரமோத் சா்மா தெரிவித்தாா்.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க