செய்திகள் :

வக்ஃப் மசோதா: மக்களவைத் தலைவரிடம் அறிக்கை சமா்ப்பித்தது கூட்டுக் குழு

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கையை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் வியாழக்கிழமை சமா்ப்பித்தாா்.

முன்னதாக, மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, அதுதொடா்பான 655 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையின் மீது புதன்கிழமை காலையில் கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தின்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வரைவு அறிக்கைக்கு 15 உறுப்பினா்கள் ஆதரவாகவும், 11 போ் எதிராகவும் வாக்களித்தனா். பெரும்பான்மை அடிப்படையில் திருத்தங்கள் தொடா்பான வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜகதாம்பிகா பால் அறிவித்தாா். இதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், ஓம் பிா்லாவிடம் அறிக்கையை ஜகதாம்பிகா பால் சமா்ப்பித்தாா்.

காங்கிரஸ் விமா்சனம்: பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசு வியாழக்கிழமை கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்றாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் செயல்பாடுகளுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். நாடாளுமன்றத்தின் அனைத்து பாரம்பரிய நடைமுறைகளையும் சீா்குலைத்து கேலிக்கூத்தாக அந்தக் குழு செயல்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க