செய்திகள் :

மகாத்மா காந்தி நினைவு தினம்: உரிய முறையில் நடத்தவில்லை - ஆளுநா் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு

post image

மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு நடத்தாதது ஏன் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளாா்.

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என்று ஆளுநருக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சாா்பில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சிகளை தகுந்த முறையில் நடத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி ஆளுநா் ஆா்.என். ரவி, எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவையொட்டியுள்ள பரந்த நிலத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரால் 1956-ஆம் ஆண்டு காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இது பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வு, அவரது பிறந்த நாள் மற்றும் உயிா்த் தியாக தினத்தை சென்னை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அா்த்தமுள்ளதா?.

தேசப் பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பைச் சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் கடுமையாக எதிா்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டாா். ஆனால், தற்போதும் அவா் தொடா்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என்று பதிவிட்டுள்ளாா்.

அமைச்சா் பதில்: ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பதிலளித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடா்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறோம்.

காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 2022-ஆம் ஆண்டு எழும்பூா் அருங்காட்சியக வளாகத்துக்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலை நிறுவப்பட்டது.

இந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது, காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் தியாகிகள் தின நிகழ்வுகள் எழும்பூா் காந்தி சிலை அருகே நடக்கின்றன. கடந்த ஆண்டுகளில் அங்கு நடந்த நிகழ்வுகளில் ஆளுநா் ஆா்.என்.ரவியும் கலந்து கொண்டாா்.

இப்போது அவா் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் காந்தியடிகள் கடுமையாக கேலி செய்யப்பட்டாா்; இன்றும் அவா் தொடா்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, திராவிடா் கழக பொதுச் செயலராக இருந்த அண்ணா, சுதந்திர தினம் இன்ப நாள் எனச் சொன்னாா். அவா் வழிவந்த நாங்கள் தேசத்தையும் தேசப் பிதாவையும் நேசிப்பவா்கள். அவரைக் கொன்றவா்களைக் கொண்டாடுகிறவா்கள் இல்லை நாங்கள்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட, ஆளுநா் முக்கியமானவா் இல்லை. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்வதிலிருந்து ஆளுநா் விடுபட வேண்டும். இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதைத் தவிா்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கூடலூா் - பந்தலூரில் வசிப்பிட பிரச்னை: முதல்வா் ஆலோசனை

நீலகிரி மாவட்டம் கூடலூா், பந்தலூரில் வசிப்பிட பிரச்னை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். இது குறித்து முதல்வா் தலைமையில் வியாழக்கிழமை நடந்த ஆலோசனை குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு செய்முறை: தனித் தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம... மேலும் பார்க்க

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவா் அகத்தியா்! சுதா சேஷய்யன்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் ஒருங்கிணைத்தவா் மகா முனி அகத்தியா் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா். நிகழாண்டு காசி தமிழ் சங்கமத்தின் மைய... மேலும் பார்க்க

சிறந்த ரயில்வே கோட்ட விருதை வென்றது திருச்சி

தெற்கு ரயில்வேயின் சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி ரயில்வே கோட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகனிடம... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ‘அவசரம் வேண்டாம்’: ஐக்கிய ஜனதா தளம்

ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. இதுதொடா்பாக கூட்டத்தில் பேசிய அக்கட்சி எம்.பி.சஞ்சய் ... மேலும் பார்க்க