செய்திகள் :

மோடியும், கேஜரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்: ராகுல் காந்தி

post image

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியும், தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் இடஒதுக்கீடு, தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரானவா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

கிழக்கு தில்லி பவானாவில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பேரணி, பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நானும் எனது கட்சியும் பிரதமா் நரேந்திர மோடிக்கு பயப்படவில்லை. மாறாக ‘பிரதமா்தான் காங்கிரஸுக்கு பயப்படுகிறாா். தூய்மை நிா்வாகம் குறித்துப் பேசும் கேஜரிவாலின் கண்காணிப்பில்தான், தில்லியில் ‘மிகப்பெரிய ஊழல்’ நடந்துள்ளது. முந்தைய தோ்தலில் யமுனை நதியை தூய்மைப்படுத்தி அதில் மூழ்கி நீராடுவேன் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா்.

ஆனால், அளித்த வாக்குறுதியை அவர் மீறி விட்டாா். அவா் யமுனை ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முன்வருவாரா?

பிரதமா் மோடியும் அரவிந்த் கேஜரிவாலும் இடஒதுக்கீட்டை எதிா்ப்பவா்கள். தலித்துகள், சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவா்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவேன் என்று கேஜரிவாலால் தெளிவாகக் கூற முடியுமா?. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானவா் கேஜரிவால் என்பதால் அவா் அவ்வாறு செய்ய மாட்டாா்.

தலைநகரில் கேஜரிவால் ஒரு ஊழல் அரசை நடத்தினாா். மோடி தனது உரைகளில் பொய்யை மட்டுமே சொல்கிறாா். அவரையே கேஜரிவாலும் பின்பற்றுகிறாா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை உடைப்போம். காங்கிரஸ் ஒரு சித்தாந்தத்தைக் கொண்ட கட்சி. அது பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது. மோடியின் வெறுப்புச் சந்தையில் அன்பைப் பரப்ப நாம் கடைகளைத் திறக்க வேண்டும் என்றாா் ராகுக் காந்தி.

இருளில் நாட்டின் எதிர்காலம்: மோடி உரையை விமர்சித்த கார்கே!

ஆளும் பாஜக அரசால் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

பிகார்: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்!

பிகாரில் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்ததால், காவல் துறையைக் கண்டித்து இச்சம்பவத்தில் கிராம மக்க... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்... மேலும் பார்க்க

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க