பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம்: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
குடியரசுத் தலைவர் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவருக்குமானதாக இருந்தது.
அனைவருக்கும் வளர்ச்சி என்பதை புரிந்துகொள்ளவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது
வளர்ச்சி மீதான நம்பிக்கையால்தான் மக்கள் எங்களை 3வது முறையாகத் தேர்வு செய்துள்ளனர்
குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டு மக்கள் நமது மாடலின் வளர்ச்சியை பரிசோதித்து புரிந்துகொண்டு நமக்கு ஆதரவு அளித்துள்ளனர். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை என்பதே நமது மாடல்.