Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!
திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அந்த பகுதி வார்டு கவுன்சிலர் தண்ணீரில் இருந்தது என்ன என்று பார்த்தபோது, அது மனித கழிவு என்பது தெரியவந்தது. இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசியவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கஞ்சா போதையில் சிலர் சுற்றித் திரிவதாகவும், அவர்களில் யாரேனும் தான் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்து இருக்கலாம் என்றும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, போலீஸார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.