செய்திகள் :

`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!

post image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திரகுமார் ஆகியோர் எங்களுக்கு அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி கொடுத்து வருகிறோம் எனக் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பிரகாஷ் மற்றும் உறவினர்கள் 7 பேர் அரசு வேலை வேண்டி 48 லட்ச ரூபாயை மகாலட்சுமி தரப்பிடம் கொடுத்துள்ளனர்.

இதேபோல அல்லிநகரத்தைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட மாவட்டத்தில் மொத்தம் 21 பேரிடம் ஒரு கோடியே 37 லட்ச ரூபாயை இந்த கும்பல் வசூலித்துள்ளனர்.

ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளனர். பணத்தை திரும்ப கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்த சிலருக்கு போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து தேனி மாவட்ட எஸ்.பி.,யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கைதான கண்ணன்

மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பாலமுருகன், மோசடி செய்த மகாலட்சுமி, நாகேந்திரனை கைது செய்தார். இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் இடைத்தரகராக இருந்து மோசடிக்கு துணையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் கண்ணனை கைது செய்துள்ளனர்.

மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்கில் மோசடி?

மும்பையில் அடிக்கடி சினிமா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பழம்பெரும் நடிகர்கள் பெயரில் வழங்கப்படுவதுண்டு. சினிமாவோடு தொடர்புடைய சில அமைப்புகள் இவ்விருது வழங்கும் விழாக்களை நடத்துவது வ... மேலும் பார்க்க

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் ப... மேலும் பார்க்க

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க