கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!
தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். பின்னர் சத்தியசீலன் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியை தன் செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.
நான், எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும் இல்லை என்றால் போட்டோவை சமூக வலைதளங்களில் போட்டுடுவேன் என்றுள்ளார். சிறுமி அவரிடம் பேசாமல் இருந்தாலே செல்போனை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். போட்டோவை காட்டி மிரட்டியதால் பயந்து போனதால் இதை வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில் சத்யசீலன் மிரட்டல் எல்லை மீற தனது அம்மாவிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து சிறுமியின் அம்மா, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சதயசீலன் செல்போனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் போட்டோ இருந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவன் ஒத்துக்கொண்டுள்ளான் என்கிறார்கள். இதையடுத்து போக்சோ வழக்கில் சத்தியசீலனை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர்.