இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை தேடும் அரசு!
கிறிஸ்துமஸ் -புத்தாண்டு லாட்டரி குலுக்கல்
கேரள மாநில அரசு லாட்டரித்துறை மூலம் லாட்டரிச்சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் பரிசுக்காக 50 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வந்தன. இன்று மதியம் 12 மணிவரை லாட்டரிச் சீட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டன. 20 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான இந்த லாட்டரி டிக்கெக் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 47 லட்சம் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. கிறிஸ்துமஸ் -புத்தாண்டு லாட்டரி குலுக்கல் இன்று இன்று மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித்துறை தலைமை அலுவலகமான கார்கி பவனின் நடைபெற்றது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/oppdujb1/IMG1738755750179.jpg)
பம்பர் பரிசு
முதல் பரிசான 20 கோடி ரூபாய்க்கான பம்பர் பரிசு XD 387132 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்துள்ளது. அந்த லாட்டரி சீட்டு கண்ணூர் பகுதியில் விற்பனை ஆனது தெரிய வந்தது. அதே சமயம் லாட்டரிச்சீட்டு வாங்கிய அதிஷ்டசாலி யார் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இரண்டாம் பரிசாக ஒரு கோடி ரூபாய்வீதம் 20 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய் வீதம் 30 பேருக்கும் வழங்கப்படுகிறது. பம்பர் பரிசுத்தொகையான 20 கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு வரிகள், ஏஜெண்ட் கமிஷன் உள்ளிட்ட பிடித்தங்கள் போக 12.6 கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
`நம்பிக்கை ஒன்றுதான் பிரதானம்' - கேரள நிதித்துறை அமைச்சர்
லாட்டரி குலுக்கல் நிகழ்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கேரள நிதித்துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் பேசுகையில், "சம்மர் பம்பர் லாட்டரியின் தொடக்கவிழாவுடன் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரிக்கான குலுக்கலும் நடைபெற்றது. கேரளா லாட்டரி இந்தியாவில் மிகவும் பிரபலமான லாட்டரியாகும். பிற மாநிலங்களில் உள்ளவர்களும் இது எப்படி சரியான முறையில் நடைபெறுகிறது என அறிந்துகொள்ளும் விதமாக விசாரித்துவருகின்றனர். நம்பிக்கை ஒன்றுதான் கேரளா லட்டரியின் பிரதானமாக உள்ளது. நூறு சதவிகிதம் மிகச்சரியாக இந்த லாட்டரியை அரசு நடத்துகிறது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை சரியான முறையில் வழங்குகிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/vvymnhrf/PRP-104-2025-02-05-RAMESH-2.jpg)
ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏஜெண்டுகள் உள்ளனர். அதைவிட பல மடங்கு விற்பனை பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களுக்கும் வருவாய் கிடைக்கின்றன. மாநிலத்துக்கும் அதிக வருவாய் வருகிறது. பம்பர் பரிசுகள் மட்டும் அல்ல இரண்டாம் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு லாட்டரி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றன. இன்னும் அதிகம்பேருக்கு பரிசுகள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.
20 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச் சீட்டை விற்பனைசெய்த ஏஜெண்ட் அனீஷ் கூறுகையில், "எனக்கு வெறும் மகிழ்ச்சி அல்ல, இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம்பிக் மெடல், ஆஸ்கார் விருது பெற்றது போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். சத்தியன் என்பவர் பில் செலுத்தி அந்த டிக்கெட்டை வங்கியுள்ளார். அவர் விற்பனையாளரா அல்லது வாடிக்கையாளரா என்பது தெரியவில்லை." என்றார்.