மிரட்ட வரும் டைனோசர்கள்: ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த் டிரைலர் வெளியானது..!
உலகளவில் வரவேற்பைப் பெற்ற ஜுராசிக் வோர்ல்டு திரைப்பத்தின் புதிய பாகம் ‘ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளtஹு.
இத்திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் டிரைலர் இன்று(பிப். 5) மாலை வெளியிடப்பட்டுள்ளது.
யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோன்ஸன் முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். பார்வையாளர்களை மிரளச் செய்ய இந்த டைனோசர்கள் தவறாது என்பதை டிரைலரின் காட்சிகள் காட்டுகின்றன.