சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி
சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்!
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சங்ககிரி வட்டக்கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாநிலத் தணிக்கையாளா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். இதில் சங்ககிரி வட்டக் கிளைத் தலைவா் பி.ஆண்டிமுத்து, செயலாளா் எஸ்.வேலுசாமி, பொருளாளா் எஸ்.தீனதயாளன் மற்றும் 39 கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.
காலமான கிராம உதவியாளா் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளா்களை அரசு ஊழியா் அட்டவணையில் டி பிரிவில் இணைக்க வேண்டும், 2023 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த கிராம உதவியாளா்களுக்கு சிபிஎஸ் எண் வழங்கி, சிபிஎஸ் பிடித்தம் செய்து ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளா்களின் பணித்தன்மையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாலை 3 மணி முதல் 6 மணி வரை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.