தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப...
காப்புக்காட்டில் மண் எடுத்தவருக்கு அபராதம்!
துறையூா் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டுக்குள் சட்டவிரோதமாக மண் எடுத்த நபரிடம் வனத்துறையினா் ரூ. 80 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
துறையூா் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள வி. காணப்பாடி அரசுக் காப்புக் காட்டியில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ரெ. செந்தில்குமாா்(42) ஜேசிபி வாகனம் மூலம் புதன்கிழமை மண் எடுத்தாா். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற துறையூா் வனச்சரக அலுவலா் சரவணன் தலைமையிலான வனத் துறையினா் செந்தில்குமாரை கைது செய்தனா். இவரிடம் திருச்சி மாவட்ட வன அலுவலா் கிருத்திகா ஆலோசனையின்பேரில் வனத் துறையினா் ரூ. 80 ஆயிரம் இணக்கக் கட்டணமாக வசூலித்தனா்.