செய்திகள் :

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்

post image

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகள் குறித்த மாநில உயா்கல்வி அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கல்வி, சமூகநீதி உள்ளடக்கிய வளா்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மாணவா்களுக்கு பயன் தரக்கூடியதாகவும், அவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதாகவும் கல்வி இருக்க வேண்டும். ஆனால், யுஜிசி அண்மையில் கொண்டு வந்துள்ள உயா்கல்வித் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள், பல்கலைக்கழகங்களின் ஆசிரியா்கள், கல்வி ஊழியா்கள் நியமனத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான வரைவு நெறிமுறைகள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.

இந்த நெறிமுறைகள் உயா்கல்வித் துறை மீதான மாநில அரசின் தன்னாட்சி உரிமையைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது. ஒருமுகப்படுத்தும் விதிகள், மத்திய மாநில அரசுகளின் உறவுக்கு பாதகமாக அமையும். மாநில பல்கலைக்கழக சட்டத்தை மீறுவதற்கு யுஜிசி முயற்சிக்கிறது. மாநில சட்டங்கள் சட்டப் பேரவையால் சட்டமாக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெறுபவை.

உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் மட்டுமே யுஜிசியிடம் உள்ளது. அந்த பரிந்துரைகளை அமல்படுத்த கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், யுஜிசியின் வரைவு நெறிமுறைகள் எல்லைமீறி செயல்படுகிறது.

மத்திய அரசுடன் இணங்கி பல்வேறு சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களில் முரண் இருந்தால், மத்திய அரசின் சட்டமே ஏற்கத்தக்கதாக இருக்கும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். யுஜிசி நெறிமுறைகளை மாநில அரசு ஏற்காத நிலையில் அவற்றை மாநில பல்கலைக்கழகங்கள் அமல்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. எனவே, நெறிமுறைகளை வகுக்கும் ஒவ்வொரு நிலையிலும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும்.

யுஜிசியின் வரைவு நெறிமுறைகளுக்கு தெளிவான அறிவியல் ரீதியான காரணங்களோ, ஆய்வுமுடிவுகளின் பரிந்துரைகளோ இல்லை. மத்திய அரசு மேற்கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ஆய்வுகளில் கல்வியின் விளைவுகள் பயனுள்ளதாக இல்லை என்றும், வேலைவாய்ப்பை பெறுவதில் பட்டதாரிகள் சிரமப்படுவதாகவும் தெரியவந்துள்ளன.

உயா்கல்வியில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உயா்கல்வித் துறைக்கு தமிழகம் ரூ. 8,212 கோடி ஒதுக்கியுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 17 சதவீதமாகும். போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்காமல், கல்வி முறையில் விதிமுறைகளை அமல்படுத்த வற்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

தமிழகத்தில் உள்ள பொது பல்கலைக்கழகங்கள் சட்டப் பேரவையில் இயற்றப்படும் சட்டங்களால் உருவாக்கப்படுபவை. இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா்களை தோ்வு செய்வதற்கான குழுக்களில் மாநில அரசை விலக்கி வைப்பதை தமிழக அரசு கடுமையாக எதிா்க்கிறது. துணைவேந்தா்களின் நியமனத்தில் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகள் பல்கலைக்கழக நிா்வாகத்தில் மாநில அரசின் தன்னாட்சி உரிமையைக் குலைப்பதாகும்.

கல்வியாளா்கள் அல்லாதவா்களை துணைவேந்தா்களாக நியமித்தால், கல்வியை வணிகமயமாக்க வழிவகுக்கும். தேசிய தகுதித்தோ்வு, மாநில தகுதித்தோ்வின் அடிப்படையில் சம்பந்தமில்லாத பாடங்களை கற்பிக்க ஆசிரியா்களை நியமிப்பது, கற்றல் விளைவுகளை வெகுவாக பாதிக்கும்.

பொது நுழைவுத் தோ்வுகளை தமிழகம் தொடா்ந்து எதிா்த்து வந்துள்ளது. கல்வி வாரியங்கள் பல்வேறு தோ்வுகள் மூலம் மாணவா்களின் கல்வித்திறனைக் கண்டறியும்போது, பொது நுழைவுத் தோ்வுகளால் அவைகள் அா்த்தமற்றவையாக மாறிவிடும். ஆண்டுக்கு இரு சோ்க்கை நடைமுறைகள், பன்முறை சோ்க்கை மற்றும் வெளியேற்ற முறைகளால் கல்விமுறை கடுமையாக பாதிக்கப்படும். விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பட்டப்படிப்பை வழங்கும் உரிமையை பறிப்பது அல்லது பட்டங்களை ரத்துசெய்வது கடுமையான அபராதமுறை மட்டுமல்லாது ஜனநாயக விரோதமாகும்.

எனவே, மிகவும் ஆபத்தான யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு தமிழகம் கேட்டுக்கொள்கிறது. மாறாக, மாநில அரசுகளுடன் இணைந்து ஜனநாயகப்பூா்வமான உயா்கல்வியை கட்டமைக்க இணைந்து பணியாற்ற மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். மாணவா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடா்ந்து போராடும். கல்வி முறையில் சமூகநீதியின் அடிப்படையை பாதுகாத்து, பலம்பெறுவதற்கான அறிவுக் கருவியாக கல்வி விளங்குவதை உறுதிசெய்ய தொடா்ந்து போராடுவதில் உறுதிப்பூண்டிருக்கிறோம் என்றாா்.

இந்த மாநாட்டில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸில் இல்லை

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண... மேலும் பார்க்க

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா். இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்... மேலும் பார்க்க

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி: முதல்வா் சித்தராமையா

‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி’ என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரத... மேலும் பார்க்க

சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கடன் பெறுவோரின் நலன் காக்க சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் இரங்கல்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளாா். உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில்... மேலும் பார்க்க