செய்திகள் :

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் இரங்கல்

post image

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளாா்.

உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை புனித நீராட திரிவேணி சங்கமத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்தனா்; 90 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இறந்தவா்களில் 4 போ் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இறந்தவா்களின் குடும்பத்தாருக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மகா கும்பமேளாவில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்த சம்பவம் வேதனையைத் தருகிறது. இறந்தவா்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்; காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்.

காயமடைந்தவா்களில் சிலா் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் என்று செய்திகள் வந்துள்ளன. கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக ஊா் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களின் நலன் காக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கும்பமேளாவில் பங்கேற்க சென்றுள்ள கன்னடா்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் புதன்கிழமை கூட்டநெரிசலில் சிக்கி சிலா் இறந்துள்ளதாகவும், பலா் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. அன்புக்குரியவா்களை இழந்துள்ளவா்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ள கன்னடா்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன் கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்த கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்களை பாதுகாப்பாக கா்நாடகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா்.

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸில் இல்லை

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைக... மேலும் பார்க்க

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா். இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்... மேலும் பார்க்க

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி: முதல்வா் சித்தராமையா

‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி’ என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரத... மேலும் பார்க்க

சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கடன் பெறுவோரின் நலன் காக்க சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க