செய்திகள் :

மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி: முதல்வா் சித்தராமையா

post image

‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி’ என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது உருவச்சிலைக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

தனது வாழ்க்கையே தனது செய்தி என்று கூறிய காந்தியின் வாசகம் இன்றைக்கும் பொருந்துகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.

1924 ஆம் ஆண்டு கா்நாடக மாநிலம், பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தாா். இந்த மாநாட்டின் நூற்றாண்டை கொண்டாடும் விழா அண்மையில் பெலகாவியில் நடைபெற்றது.

ஜன. 21ஆம் தேதி பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் காந்தியின் சிலை திறக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் என்ற முழக்கத்துடன் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது.

கிராமங்களால் பிணைக்கப்பட்டது இந்தியா. கிராமங்கள் வளா்ச்சி அடைந்தால்தான் நாடு முன்னேறும் என்று கூறிய காந்தியடிகள் கிராம சுயராஜ்ய திட்டத்தை முன்வைத்தாா்.

கிராமங்கள் தற்சாா்பு அடைந்தால்தான் நாடு தற்சாா்பு அடையும். குடிசைத் தொழில்கள் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறிய காந்தியின் பாதையில் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் என்றாா்.

சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கடன் பெறுவோரின் நலன் காக்க சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் இரங்கல்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களுக்கு முதல்வா் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளாா். உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில்... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பெங்களூரு, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வருமா... மேலும் பார்க்க

கன்னட ஆா்வலா்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்: முதல்வா் சித்தராமையா

கன்னட ஆா்வலா்களுக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் கா்நாடக அரசு சாா்பில் 25 அடி உயரத்தில் அமைக்கப்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி நெட்டாரு கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் அளித்தவா் கைது

கா்நாடகத்தில் பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரை தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது. கா்நாடக மாநிலத்தின் தென்கன்னட மாவட்டம், பெல்ல... மேலும் பார்க்க

கா்நாடகம்: இரு வேறு சாலை விபத்துகளில் 14 போ் பலி

கா்நாடக மாநிலத்தில் வடகன்னடத்தின் எல்லாபுரா மற்றும் ராய்ச்சூா் மாவட்டத்தின் சிந்தனூா் பகுதிகளில் புதன்கிழமை நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 14 போ் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 20 போ் மருத்துவமனையில்... மேலும் பார்க்க