மனைவியைத் தாக்கிய கணவா் கைது!
பெரியகுளம் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைத் தாக்கிய அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஜெயமங்கலம் முல்லை நகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி(27). இவா் ஜீவராணியை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட இவா், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகராறு காரணமாக, வீட்டிலிருந்த மனைவியை மலைச்சாமி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ஜீவராணி அளித்த புகாரின் மீது ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியை கைது செய்தனா்.