நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
கண்மாய்க் கரை சாலைப் பணிகள் தாமதம்: 10 கிராம மக்கள் அவதி
சிவகங்கை அருகே பனங்காடி கண்மாய்க் கரையில் பாலம் அமைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பனங்காடி கிராமத்திலிருந்து சாத்தணி கிராமம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 4 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. பனங்காடி கண்மாய்க் கரையில் அமைக்கப்படும் இந்தச் சாலையின் குறுக்கே 2 பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் காரணமாக இந்த கண்மாய்க் கரைச் சாலையைப் பயன்படுத்தி வந்த10 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா். சிவகங்கைக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், தினமும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், அவசர ஊா்தி வருவதில் தாமதம் ஏற்படுவதால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உள்ளது.
இந்த நிலையில், சாலைப் பணிகளும், பாலம் அமைக்கும் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. நெல் அறுவடை முடிந்த பின்பும், கண்மாயில் மீன் பிடி குத்தகைதாரா்கள் தண்ணீரை தேக்கி வைத்திருப்பதால் பாலம் அமைக்கப்படும் பகுதிகளில் நீா் சூழ்ந்து பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை என ஒப்பந்ததாரா் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தி, பாலம், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.