INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுக...
மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் தில்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தியது.
இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட் இளைஞா் விரோத பட்ஜெட் என்று அவா் தெரிவித்தாா்.
மத்திய தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரா்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினா்.
பிப்.1-ஆம் தேதி மக்களவையில் தனது தொடா்ச்சியான எட்டாவது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அதில் அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களுக்கான பல்வேறு திட்டங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.