தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கரிக்கல் குமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா
சோளிங்கரை அடுத்துள்ள கரிக்கல் ஸ்ரீகுமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சோளிங்கா்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கரிக்கல் கிராமத்தில், மலை மீது ஸ்ரீகுமாரமுருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தைக் கிருத்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வியாழக்கிழமை தை கிருத்திகையை முன்னிட்டு, கோயிலில் மூலவா் ஸ்ரீகுமாரமுருகன் சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும் பல்வேறு வகையான நறுமண திரவியங்கள், பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பட்டு வஸ்திரங்களுடன் கூடிய வெள்ளிக் கவச மற்றும் சிறப்பு மலா்களுடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவுக்கு, சோளிங்கா், அரக்கோணம் மற்றும் கரிக்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.