செய்திகள் :

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன நடந்தது?

post image

ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி 13 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் கூரைப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரின் மனைவி காசி அம்மாள் (வயது 85). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள், மகள்கள் உள்ளனர். பிள்ளைகளுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் ராமசாமி இறந்துவிட்ட நிலையில் காசி அம்மாள் மட்டும் தனியே வசித்து வந்தார்.

காவல்நிலையம்

இந்தநிலையில் காசி அம்மாள் வீட்டில் தனியே இருப்பதை நன்கு அறிந்த 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் அவரின்‌ வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம் பேசிய நபர், "உங்களுக்கு இருக்கும் கழுத்து வலிக்கு பிசியோதெரபி செய்வதற்காக உங்கள் மகன்தான் என்னை அனுப்பியுள்ளார்" எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய காசி அம்மாள், அந்த இளைஞரை வீட்டினுள் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து, 'கழுத்து, கையில் எண்ணெய் தேய்க்க வேண்டும், அதனால் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கழற்றி வைத்துவிடலாம்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து காசி அம்மாள், தனது கழுத்தில் அணிந்திருந்த மூன்று தங்க செயின், 4 வளையல், 2 மோதிரம், 2 கம்மல் என மொத்தம் 13 பவுன் நகைகளை மேசைமீது கழற்றி வைத்துள்ளார்.

ராஜபாளையம்

தொடர்ந்து, பிசியோ செய்வதற்கு முன்பு, கை, கால், முகத்தைக் கழுவ வேண்டும் என அந்த இளைஞர் கூறியிருக்கிறார். இதற்காக, வீட்டின் குளியலறைக்குச் சென்ற காசி அம்மாள், சிறிது நேரத்தில் திரும்பிவந்து பார்க்கும்போது, அந்த இளைஞர் மாயமாகியிருந்தார். மேஜை மீது கழற்றி வைத்திருந்த தங்க நகைகளும் திருடு போயிருப்பது தெரியவந்தது‌.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காசி அம்மாள், தனது மகன் ஜெயக்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்குத் தகவல் தெரியப்படுத்தினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. மூதாட்டி காசி அம்மாளிடம் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஆய்வாளர் அசோக்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் விமல்குமாரின் நடவடிக... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறல்; கீழே தள்ளிவிட்ட நிர்வாண இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள கந்தம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.தனது கணவருடன் வ... மேலும் பார்க்க

புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், ப... மேலும் பார்க்க

சிவகாசி: பஸ்ஸில் இடம்பிடிக்க தங்கநகையுடன் பையை போட்ட பெண்... எடுத்துக்கொண்டு ஓடிய மூதாட்டி..!

சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் மூதாட்டிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூப்பர் மார்க்கெட்டில் நடந்த திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் ஏ... மேலும் பார்க்க

திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப... மேலும் பார்க்க