செய்திகள் :

பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி  என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நாளடைவில் விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இது விமல்குமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமல்குமார்

“என்னிடம் தொடர்ந்து வழக்கம் போல நன்றாக பேசு.” என்று அவர் மாணவியை பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி விமல்குமாரிடம் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விமல்குமார் மாணவியை பழிவாங்க முடிவு செய்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு பெயர்களில் 15 போலி கணக்குகளை தொடங்கியுள்ளார்.

அந்த கணக்குகள் மூலம் மாணவி குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவு செய்து வந்தார். இதனால் மாணவியின் மனம் மிகவும் வேதனையடைந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் காவல்துறையினர் விமல்குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலி... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறல்; கீழே தள்ளிவிட்ட நிர்வாண இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள கந்தம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.தனது கணவருடன் வ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன நடந்தது?

ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி 13 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். ... மேலும் பார்க்க

புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், ப... மேலும் பார்க்க

சிவகாசி: பஸ்ஸில் இடம்பிடிக்க தங்கநகையுடன் பையை போட்ட பெண்... எடுத்துக்கொண்டு ஓடிய மூதாட்டி..!

சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் மூதாட்டிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூப்பர் மார்க்கெட்டில் நடந்த திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் ஏ... மேலும் பார்க்க