2ஆம் நாள் உணவு இடைவேளை: 172 ரன்கள் பின்னிலையில் ஆஸி.!
காலேவில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாளில் ஆஸி. அணி நிதானமாக ஆடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85*, சண்டிமல் 74 ரன்கள் அடித்தார்கள்.
ஆஸி. சார்பில் லயன், ஸ்டார்க், குன்னஹ்மேன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸி. அணி உணவு இடைவேளை வரை 84/ 2 ரன்கள் எடுத்துள்ளது.
களத்தில் கவாஜா 34, ஸ்மித் 23 ரன்களுடன் இருக்கிறார்கள். இலங்கை சார்பில் நிஷன் பெய்ரிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள்.
ஹெட் 21, லபுஷேன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்கள்.
1-0 என தொடரில் முன்னிலையில் இருக்கும் ஆஸி. அணி 2ஆம் டெஸ்ட்டில் 172 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.