விடாமுயற்சி படத்தைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்..!
இயக்குநர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்.6) உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது:
விடாமுயற்சி என்ன மாதிரியான ஒரு தீவிரமான த்ரில்லர் படம். புதிர் கணக்குகளை விடையளிப்பதுபோல முதல் காட்சியில் இருந்து கடைசிவரை நம்மை தூண்டில் போட்டி இழுக்கிறது. அஜித்குமாரின் நடிப்பு, அவரது மென்னயம் வாய்ந்த நடிப்பினால் தனியாளாக படத்தினை தனது தோளில் சுமக்கிறார்.
எதார்த்தமான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக வரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.
பின்னணி இசையின் அரசன் அனிருத் எப்போதும் மினுமினுக்கும் இசையை தருகிறார். அதனால் ஓவொரு முறையும் அவரை வாழ்த்தாமல் இருக்க முடிவதில்லை.
மகிழ் திருமேனி சாரின் திரைக்கதையை இறுக்கமாக வைத்திருந்தார். காட்சிகளை அமைத்திருந்த விதமும் அந்த மாதிரியான இடங்களில் ஒரு தொடர்ச்சியை கொண்டுவருவது அவரது கடினை உழைப்பைக் காட்டுகிறது. நிரவ், ஓம்பிரகாஷ் அவர்கள் படத்தினை உலகத் தரத்தில் காட்டியுள்ளார்கள். த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். லைகாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/ilxcye7j/GjKBaNLW4AA44nH.jpeg)
அஜித் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து படம் இயக்குவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பாளர் பிரச்னையால் அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே எனும் படத்தினை இயக்கி வருகிறார்.