அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார்.
ஸ்டீவ் ஸ்மித் சதமடிக்கும்போது 79 ரன்களில் இருந்த அலெக்ஸ் கேரி தற்போது அதிரடியாக விளையாடி ஸ்மித்தை விடவும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.
ஸ்மித் 118 அலெக்ஸ் கேரி 129 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
39 போட்டிகளில் விளையாடியுள்ள அலெக்ஸ் கேரிக்கு டெஸ்ட்டில் இது 2ஆவது சதம். பெரும்பாலும் நம்.7 அல்லது நம்.8இல் பேட்டிங் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதால் பெரிதாக ரன்களை ஸ்கோர் செய்ய முடிவதில்லை.
ஸ்மித் கேப்டன்சியில் அலெக்ஸ் கேரி 5ஆவது வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். அதை அற்புதமாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.
77 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 318/ 3 ரன்கள் எடுத்துள்ளது.