செய்திகள் :

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதையும் படிக்க:ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!

முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இதனால், நாளை மறுநாள் (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஷுப்மன் கில் பதில்

விராட் கோலி நன்றாக இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார் எனவும் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலிக்கு பயப்படும்படியான அளவுக்கு ஒன்றுமில்லை. முதல் போட்டி தொடங்குவதற்கு முதல் நாள் அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், போட்டியன்று காலை அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்படவே, விளையாட முடியாமல் போனது. அவர் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்றார்.

2ஆம் நாள் முடிவு: இருவர் சதம், 73 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. காலே திடலில் நேற்று (பிப்.6) தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இத... மேலும் பார்க்க

அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதமடிக்கும்போது 79 ரன்களில் இருந்த அலெக்ஸ் கேரி தற்போது அதிரடியாக விளையாடி ஸ்மித்தை விடவும் அதிகமான ரன்களை அடித்துள... மேலும் பார்க்க

ஆசியாவில் அதிக சதங்கள்: 36-ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தினை நிறைவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில் பவுண்டரி அடித்து சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே நிதான ஆட்டம்!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி... மேலும் பார்க்க

2ஆம் நாள் உணவு இடைவேளை: 172 ரன்கள் பின்னிலையில் ஆஸி.!

காலேவில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாளில் ஆஸி. அணி நிதானமாக ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85*, சண்டிமல் 74 ரன்கள் அடி... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸி. வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலமாக 197 கேட்ச்சுகள... மேலும் பார்க்க