செய்திகள் :

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

post image

மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.

மு.க.ஸ்டாலின்- பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.

ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்.

உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது ஸ்டாலின் மாடல் ஆட்சி?

மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் , அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.

எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா ? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

அவரின் மற்றொரு எக்ஸ் தளப் பதிவில், சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த

ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை!

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை!

மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை!

காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை!

இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி!

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக ம... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழ... மேலும் பார்க்க

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநில... மேலும் பார்க்க

கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான்: பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

வேலூர்: ரயிலில், மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறிய ஹேமராஜ், என் கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான் என்று ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட கர்ப்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்ப... மேலும் பார்க்க