பந்துவீச்சில் சந்தேகம்: அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடை!
பந்துவீச்சில் சந்தேகத்தால் அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஐமீ மாகுய்ர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைவிதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பந்து வீச்சு சட்டவிரோதமானது என்று ஐஐசியும் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
18 வயதான ஐமீ மாகுய்ர் குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது அவரது பந்து வீச்சு குறித்து புகாரளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 ஓவர்கள் பந்துவீசிய ஐமீ மாகுய்ர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதையும் படிக்க |ஆசியாவில் அதிக சதங்கள்: 36-ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!
இந்தப் புகாரைத் தொடர்ந்து ஜனவரி 21 ஆம் தேதி பிரிட்டனின் லோபோர்க் சோதனை மையத்தில் நடைபெற்ற பரிசோதனையில் அவரது முழங்கை குறிப்பிட்ட அளவைவிட 15 டிகிரி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக ஐசிசி சட்டவிதிகள் 6.1-ன் படி ஐமீ மாகுய்ர் பந்துவீசுவதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பந்து வீச்சு நடவடிக்கை மறுமதீப்பீடு வரும் வரை அவர் பந்துவீசுவதற்கான இடைநீக்கம் தொடரும்.
இந்த மதீப்பீட்டுக்கு முன்னதாக, அயர்லாந்து கிரிக்கெட் சங்கம் ஐமீ மாகுய்ருக்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.