செய்திகள் :

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

post image

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு வியாபாரிகள் சம்பாதிப்பார்கள். இவை அனைத்துக்கும் முதலீடு அவசியமானது.

ஆனால், எவ்வித முதலீடும் இல்லாமல் மகா கும்பமேளாவில் நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க : வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில் விளம்பரம்!

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இதுவரை 40 கோடிக்கணக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் விடும் காணிக்கைகளை காந்தத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சேகரித்து வருகிறார்.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையை சேகரிப்பதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் விடியோ ஒன்றில், ஒரு கயிற்றில் பல காந்தங்களை கட்டி, நீருக்குள் இறங்கும் இளைஞர் மீண்டும் கரைக்கு வரும்போது சில்லரைக் காசுடன் வருகிறார்.

அவர் விடியோ எடுத்த பக்தரின் சில கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒருமுறை ஆற்றுக்குள் இறங்கி வெளியே வந்தால், ரூ. 200 முதல் ரூ. 250 வரை கிடைக்கும் என்றும், நாளொன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவை பார்க்கும் பலரும், பட்டதாரிகள்கூட நாளொன்றுக்கு இவ்வளவு வருமான ஈட்ட மாட்டார்கள் என்று புலம்பி வருகின்றனர்.

வேப்பங்குச்சி விற்கும் இளைஞர்

அதேபோல், வேப்பங்குசியை விற்று நாளொன்று ரூ. 5,000-க்கும் மேல் இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

அவர் கூறுகையில், “எனது காதலி ஒரு யோசனையைக் கூறினார், முதலீடே செய்யாமல் சம்பாதிக்க அறிவுறுத்தினார். சங்கமத்தில் வேப்பங்குச்சியை விற்பனை செய்வதன் மூலம் பெருமளவிலான தொகை சம்பாதித்து வருகிறேன்.

முதல் நான்கு நாள்களில் ரூ. 40,000 வரை சம்பாதித்துவிட்டேன். சில நாள்கள் ரூ. 10,000 வரைக்கும்கூட வேப்பங்குச்சியை விற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கும்பமேளாவில் மோனிஷா போஸ்லே புதிய படமொன்றில் நடிகையாக அறிமுகமாக இருப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மே 4-ல் இளநிலை நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆ... மேலும் பார்க்க

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க