தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: க...
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: தப்பி ஓட முயன்றவருக்கு எலும்பு முறிவு!
வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது அந்தக் கர்ப்பிணி பெண் ரயிலில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.
மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், கர்ப்பிணியை கே.வி. குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் இறங்கிச் சென்றுள்ளார்.
ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஹேமராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியதில் கால் தடுக்கி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். இதனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.