கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினம் விடுமுறை தினமான வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி உறுதி மொழியை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் ஏற்றுக் கொண்டனா்.
படவிளக்கம்...
ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி தலைமையில் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.