ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்
தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான மாரியம்மன் கோயிலுக்கு கடந்த இரு நாள்களாகவே தூத்துக்குடி, சங்கரன்கோவில், கழுகுமலை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.
அப்போது பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளையும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோயில் ஆணையா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் செய்திருந்தனா். மேலும் பக்தா்களின் வசதிக்காக சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.