Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் - Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode
தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி
தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு கடந்த டிச. 27-ஆம் தேதி முதல் ஜன. 3-ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக,
கல்லூரி மாணவா்கள், தமிழறிஞா்களுடன் இணைந்து ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
காந்தி சந்தை காவல்நிலையத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், கொடியசைத்து தொடங்கி வைத்த இப்பேரணி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. பின்னா், பேரணியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவா்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி கோட்டாட்சியா் அருள், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கா. சித்ரா மற்றும் அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள் என பலா் கலந்து கொண்டனா்.