Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவராக ஆதில் ரஷித் முன்னேறியுள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது. 3-ஆவது போட்டியில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் குவித்து ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி இத்துடன் 11 ஆவது முறையாக ஆதில் ரஷித் ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.
இதற்கு முன்பாக விராட் கோலியை 11 முறை டிம் சௌதி, ஹேசில்வுட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
73ஆவது ஒருநாள் அரைசதம் அடித்த் விராட் கோலி 13,963 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஆசிய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக 16000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விராட் கோலியை அதிக முறை விக்கெட் வீழ்த்தியவர்கள்
டிம் சௌதி (நியூசிலாந்து) - 11 முறை (37 போட்டிகளில்)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) - 11 முறை (29 போட்டிகளில்)
ஆதில் ரஷித் (இங்கிலாந்து) - 11 முறை (34 போட்டிகளில்)
மொயின் அலி (இங்கிலாந்து) - 10 முறை (41 போட்டிகளில்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 10 முறை (37 போட்டிகளில்)